பள்ளிக்கூட புத்தகங்கள், நோட்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாகி உள்ளதால், பேப்பர், நோட்டு, புத்தகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1 2022 முதல் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்த நிலையில், அதன் மூலம் செய்யப்படும் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 35 ரூபாயாக இருந்த ஒரு குயர் நோட்டின் விலை ரூபாய் 50 ஆகவும், ரூபாய் 55 ஆக இருந்த கிங் சைஸ் நோட்டுகள் விலை ரூபாய் 65 ஆகவும் அதிகரித்துள்ளது. A4 பேப்பர் 100 விலை 150 லிருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் அனைத்து விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி பெற்றோர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.