பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிதன்ராம் மஞ்சி பேசியபோது, நான் ராமரை நம்பவில்லை. ராமர் கடவுளே இல்லை.
துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் ராமர். மேலும் அவர்கள் ராமாயணத்தை எழுதினார். அவர்களின் எழுத்துக்களில் பல நல்ல பாடங்கள் உள்ளன. அதை நாங்கள் நம்புகிறோம் துளசிதாஸ் மற்றும் வால்மீகியை நம்புகிறோம். ஆனால் இந்த உலகத்தில் இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன.
பணக்கார மற்றும் ஏழை தலித்துகளுக்கு எதிராக பிராமணர்கள் பாகுபாடு காட்டுகின்றனர் என அவர் கூறியுள்ளார். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஹிந்துஸ்தான் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. பாமக மற்றும் கூட்டணி கட்சிகளை அதை தடை செய்திருக்கிறது.