Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு படித்து வந்த இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் இன்ஜினியர் பட்டதாரியான சந்தானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியில் அறை எடுத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தானபாரதி தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தானபாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |