15வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளிலும் களம் இறங்காமல் இருந்த நிலையில், தொடரில் இருந்து முழுமையாக விலகியதால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, குல்கர்னி ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள நிலையில், சிஎஸ்கே வீரர் திடீரென அணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories