ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் ஆட்டோ ஓட்டுநரான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போனதை கண்டு பாலு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் சையத் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.