Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. ரஷ்ய படைகளை தவிக்கவிட்டு… கம்பீரமாக நிற்கும் மரியுபோல் துறைமுகம்…..!!!!!

ரஷ்ய படைகளின் கடுமையான தாக்குதல், தொடர் குண்டு வெடிப்புகளையும் தாண்டி மரியுபோல் துறைமுகம் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது, கிரெம்லினின் போர் யுக்திகளை எல்லாம் எதிர்கொண்ட உக்ரைனின் எதிர்ப்பாற்றலை பறைசாற்றும் அடிப்படையில் அமைந்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் துவங்கி கடந்த 6 வாரங்களுக்கும் மேல் ஆன நிலையில், மிகப்பெரிய பாதுகாப்புப் படையைக் கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் படைகள் இதுவரை தொடர்ந்து எதிர்த்தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் போர் யுக்தி, படைப் பலம் என்று அனைத்தையும் உக்ரைன் படைகள் எதிர்கொண்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா துவங்கிய இப்போரின் முக்கியக் குறியாக இருந்தது மரியுபோல்தான்.

உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதே போரின் முக்கியமான வெற்றியாகக் கருதப்பட்ட சூழ்நிலையில், இத்தனை தாக்குதலையும் தாண்டி அந்த துறைமுகம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால் மரியுபோல் நகரம் முழுவதும் உக்ரைன் படைவீரர்கள் தடுப்புச்சுவர் போல் நின்று, ரஷ்ய படைகளை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. உக்ரைனின் தடுப்பாற்றலை வெளிப்படுத்தும் போர்ச்சின்னமாக மரியுபோல் துறைமுகம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.

Categories

Tech |