Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு….. “பெட்ரோல் வரியை குறைக்க வேண்டும்”…. மத்திய அமைச்சர் வேண்டுகோள்….!!!!

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை, இருப்பினும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து சாமானிய மக்களை காப்பதற்கு மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டுமென்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை கடந்த ஆண்டு மத்திய அரசு குறைத்தது. ஆனால் மாநில அரசுகள் வரியை குறைக்க முன்வர வில்லை. ஆனால் வாட் வரி அதிகமாகவே உள்ளது. சத்தீஸ்கரில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 24 சதவீதமாக உள்ளது. இது 10% ஆக குறைந்தால் மட்டுமே விலை குறையும். பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |