ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘கேஜிஎப் சாப்டர் 2’. படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நேற்று (ஏப்ரல் 14ஆம் தேதி) வெளியானது.
இந்நிலையில் கேரளாவில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் கேரளா பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் 7.42 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.