திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்நிலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தின் முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்தர்கள் நலன் கருதி ஆட்டோவுக்கான தனிநபர் கட்டணம் ரூ30 மற்றும் ரூ.50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து 04175-232266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.