இஸ்ரேல் அரசு வான் எல்லைக்குள் புகுந்து எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது.
அணு ஆயுதம் போன்ற பல ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது. மேலும், அயன் டோம் என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலில் இருக்கிறது. இந்த அயன் டோமானது, எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தற்போது அயன் பீம் என்ற லேசர் மூலம் இயங்கக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது வான் எல்லைக்குள் புகும் ஏவுகணை, ராக்கெட், ஆளில்லா விமானம் போன்ற அனைத்தையும் ஆயுதம் லேசர் மூலமாக தாக்கி அழித்துவிடும்.
மேலும் துல்லியமாக எந்த சத்தமும் இல்லாமல் தாக்கி அழிக்கக்கூடியது. இந்த லேசர் வான் பாதுகாப்பு அமைப்பானது, எந்த இலக்கை தாக்கினாலும் அது நம் கண்களுக்கு தெரியாத வகையில் இருக்கும் என்று இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட் கூறியிருக்கிறார்.