காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வதந்தி கிளப்பிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது வதந்தி என தெரியவந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு பேசியவரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சிவப்பிரகாசம் என்பதும், மதுபோதையில் பேசியதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவப்பிரகாசத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.