ரஷ்ய நாட்டின் ஒரு தொலைக்காட்சி, தங்கள் நாட்டின் போர்க்கப்பல் மூழ்கியபோதே மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற முக்கிய போர்க்கப்பலில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் தீப்பற்றி எரிந்தது. அதனையடுத்து, கப்பல் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய வழியில் சூறாவளியில் மாட்டி கடலுக்குள் மூழ்கிவிட்டது. எனினும் அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.
எனினும் உக்ரைன் அரசு, தன் நெப்டியூன் ஏவுகணையின் மூலமாக கருங்கடல் கடற்படையினுடைய முக்கிய கப்பலான மாஸ்க்வாவை அழித்திருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த ஒரு முக்கிய ஊடகம், தற்போது நடப்பது உக்ரைன் நாட்டிற்கு எதிரானது இல்லை. நேட்டோ நாடுகளுக்கு எதிராக மாறியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.
https://twitter.com/NowInUkraine/status/1514870832970960896
அந்தவகையில் இது கட்டாயம் மூன்றாம் உலகப்போர் தான் என்றும் தெரிவித்திருக்கிறது. மேலும் போர் தீவிரமாகியிருப்பதை மூன்றாம் உலகப்போர் எனலாம், அது கட்டாயம் உறுதியானது என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.