சீனா, தென்கொரியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. மீண்டும் கொரோனா தலை தூக்குகிறதோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 30 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 4, 35, 700 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் சராசரியாக 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், பாதித்தவர்களின் சராசரி வயது 30 ,ஆகவும் பலியானவர்களின் சராசரி வயது 83 ஆகவும் இருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த நாட்டில் 69 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.