மது என நினைத்து விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்திகுப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் முனியப்பா தனது வீட்டில் இருந்த விஷத்தை மது என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மயங்கி விழுந்த முனியப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.