புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகமானது ஒரு சீர்திருத்தவாதியாக அம்பேத்கர் மற்றும் மோடியின் பங்களிப்பை ஒப்பிட்டுப் பேசுகிறது. இப்புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார்.
மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியும் சிந்தனையும், செயல் வீரரின் நடவடிக்கையும் என்ற புத்தகத்தில் அம்பேத்கருக்கு நிகர் மோடி என்று இசைஞானி இளையராஜா ஒப்பிட்டு எழுதியதற்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இது குறித்து மேலும் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.