தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலை தேடி கொண்டிருக்கும் அனைவரும் இம்முகாமில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன்படி இம்முகமானது என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதையடுத்து இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10-ஆம் வகுப்புக்கு கீழ் மற்றும் 10, 12-ஆம் வகுப்பு மேலும் Graduation, Teacher Training, ITI, Diploma, BE, Pharmacy, Tailoring, Hotel management போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
நிறுவனம் | District Employment and Career Guidance Centre – Dindigul, Christian College Of Engineering & Technology – Oddanchatram |
பணியின் பெயர் | Various |
பணியிடங்கள் | More than 5000 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வரும் ஏப்ரல் 30 தேதிக்குள் முன்பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முடியும்.
இதையடுத்து இந்த வேலைவாய்ப்பு முகமானது வருகிற ஏப்ரல் 30 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வைத்து நடைபெறும். எனவே அனைவரும் இந்த வாய்ப்பை தவற விடாமல், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
The Christian College of Engineering and Technology,
Oddanchatram,
Dindigal- 624619