Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளியான வீடியோ!!…. தாய்க்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மகன்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்த மூதாட்டியை  அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி நகரில் ஞானஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சண்முகசுந்தரம், வெங்கடேசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரு மகன்களும் ஞானஜோதியை சொத்து பிரச்சினையால் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில்  சாப்பாடு எதுவும் கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளனர். இதனால் பசியில் துடித்த  ஞானஜோதி வீட்டின் தரையை தோண்டி மண்ணை சாப்பிட ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து  சில நேரங்களில்  ஞானஜோதியின் மகன்கள் பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்று வந்தனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஞானஜோதிக்கு  உணவு அளித்துள்ளனர். ஆனால் சண்முகசுந்தரம் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து உணவு அளிப்பவர்களிடம்  தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் ஜெயச்சந்திரன் என்பவர் இந்த கொடுமையை பார்த்து தாங்க முடியாமல் ஞானஜோதியை  ஜன்னல் வழியாக   வீடியோ எடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு  அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக மூதாட்டியை மீட்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானஜோதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிகாரிகள் ஞானஜோதியை  முதியோர் இல்லத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளை கண்கலங்க வைத்துள்ளது.

Categories

Tech |