தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சிறப்பு தரிசன டிக்கெட் மூலமாக சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு துர்கா ஸ்டாலின் ரங்கநாயகம் மண்டபத்திற்கு சென்றார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரம் முழங்க துர்கா ஸ்டாலினுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதனையடுத்து வசந்த உற்சவத்தின் 2-ம் நாளில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்திலும் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றமும் நடைபெற இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளது. இந்த சமயத்தில் துர்கா ஸ்டாலின் திருப்பதிக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடந்த ஆண்டு துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் கோவிலில் முருகனை தரிசனம் செய்தார்.