Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் பாடலை கேட்ட சிறுவர்கள்….. எப்.ஐ.ஆர் போட்ட போலீஸ்….. உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் புகழ் பாடும் பாடலை கேட்டதற்காக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பூட்டா பகுதியிலுள்ள சிங்கை முராவன் கிராமத்தில் முஸ்த்கீம், நயீம் சிறுவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் தன்னுடைய அத்தை கடையில் அமர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புகழ் பாடும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை கைப்பேசியில் கேட்டுள்ளனர். இதைக்கேட்ட ஆஷிஸ் என்பவர் 2 சிறுவர்களையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் ஆஷிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தனது செல்போனில் படம் பிடித்த ஆஷிஸ் பரேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்படி காவல்துறையினர் முஸ்த்கிம் மற்றும் நயீம் ஆகிய 2 பேரையும் கைது கைது செய்து 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையறிந்த சிறுவனின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் சென்று என்னுடைய குழந்தைகள் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே பாடலை கேட்டார்கள். இதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று காவலர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் சிறுவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுவர்களின் குடும்பத்தினர் கூறிய புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் அகர்வால் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

Categories

Tech |