Categories
அரசியல்

பா.ஜ.க முக்கிய பிரமுகர்….. தீ வைத்து கொளுத்தப்பட்ட கார்….. பெரும் பரபரப்பு….!!!!

பா.ஜ.க கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் மதுரவாயல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் நனைத்த துணியினால் காரை துடைத்து  தீ வைத்துள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பா.ஜ.க மற்றும் வி.சி.க கட்சியினருக்கு மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் சக்திவேல் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |