Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மகாராஷ்டிராவில் பள்ளிகளுக்கு மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா  காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அதிக  விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும்  ஜூன் 27 முதல் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அதிக வெப்ப நிலையை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளைப் பொருத்தவரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கும் பணிகள் நடைமுறையில் இருக்கிறது. இப்போது 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தவிர, மகாராஷ்டிரா SSC, HSC 2022 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான முடிவுகள் மே மாதத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்றும் முடிவு அறிவிப்புக்கான தகவல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |