Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (16.04.22) …. எந்தெந்த பகுதிகளில் மின்தடை…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (16.04.2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதனால் தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, கீழரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி, வ. உ. சி. ரோடு, டி. ஆர். நாயுடு தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.  தமிழ் நாட்டில் மற்ற பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |