பாலஸ்தீனியர்கள் நேற்று காலை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல் வழிபாடு செய்தனர். இதையடுத்து வழிபாடு நடந்து முடிந்த பிறகு மத வழிபாட்டு தலத்தை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் படையினர் மீது தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர். இந்த மோதலில் சுமார் 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.