அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்கிரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றது. அதே நேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு நேரில் சென்று அதிபரிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி இருவரில் ஒருவரோ, அல்லது ராணுவ மந்திரி அல்லது வெளியுறவு மந்திரியோ உக்ரைன் செல்வார்கள் என வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த தகவலை ஜோ பைடன் நிர்வாகம் மறுக்கின்றது. அதாவது ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி உறுதிபட தெரிவித்துள்ளார்.