நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியம், தற்போது படிப்படியாக பழையபடி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க விமான சேவைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாகவே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் ஊதிய நிறுவனம் 55 சதவீதம் வரை குறைந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்து விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் பழைய ஊதியம் படிப்படியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.