எம்.பி.பி.எஸ் படிப்பில் காலியாக உள்ள சீட்டுகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சவால்களை சந்திப்பதிலும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க அரசு என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் அமைந்துள்ளது. இதில் 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களை மாணவ மாணவியருக்கு ஒதுக்கும் பணியினை மத்திய கலந்தாய்வு குழு மேற்கொள்கிறது. இந்த குழு 2021-22 ஆம் ஆண்டிற்கான 4 கலந்தாய்வு குழுக்களை முடித்துள்ளது. ஆனால் இதுவரை 24 அகில இந்திய ஒதுக்கீடுகள் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும், சுயநிதிக் கல்லூரிகளிலும் சில அரசு ஒதுக்கீடுகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த இடங்கள் பொதுவாக 2-வது கலந்தாய்வு கூட்டம் முடிந்த உடனே நிரப்பப்படும். ஆனால் 4 கலந்தாய்வு கூட்டம் முடிவடைந்த நிலையில் மருத்துவ இருக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் சுயநிதி கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் படிக்கும் நிலை பறிபோகக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு அரசு கல்லூரிகளில் ஒதுக்கப்படும் 4 இருக்கைகளும் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அகில இந்திய ஒதுக்கீடுகளை முறையாக ஒதுக்குவற்கான வழிவகைகளை செய்ய வேண்டுமென அ.தி.மு.க ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.