Categories
சினிமா

10 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும்…. இயக்குனர் ராம்கோபால் வர்மாவுடன்…. இணையும் பிரபல நடிகை…..!!!!!

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராம்கோபால் வர்மா இப்போது புதிய தொடரை தயாரித்து இருக்கிறார். முன்னணிகூட்டணியான ராம் கோபால் வர்மா, இஷா கோபிகர் ஆகியோர் வெகு இடைவேளைக்கு பின் மீண்டும் இந்த தொடரில் இணைந்து உள்ளனர். எம்எக்ஸ் அசல் தொடரான “தகனம்” தொடரில் இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது. இதில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இத்தொடரை ராம்கோபால் வர்மா தயாரிக்க, அகஸ்தியாமஞ்சு இயக்கி உள்ளார். கிரைம் திரில்லராக உருவாகியுள்ள “தகனம்” தொடர், தனது தந்தையின் மரணத்துக்கு பழிவாங்கும் ஒரு மகன். பழிவாங்குதல், இரத்தக்களரி மற்றும் ஒடுக்கு முறைக்கான எதிர்ப்பு போன்றவற்றின் பின்னணியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் தொடர்பாக தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா பேசியதாவது, என் முதல் ஓடிடி தொடரான “தகனம்” தொடரை  எம்எக்ஸ் உடன்  இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மகாத்மா காந்தி கூறிய “கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்” மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட “பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி” என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த  கதை ஆகும். எனினும் தகனம் வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் கூறுகிறது. இதுஒரு க்ரைம்த்ரில்லர் அல்ல, ஆனால் இது உங்களை உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது என்று கூறினார். இந்த தொடர் ஏப்ரல் 14 நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Categories

Tech |