Categories
மாநில செய்திகள்

நாங்க மட்டும்தான் விளம்பரம் செய்வோம்…. டெல்லி வரை பறந்த புகார்…. அதிர்ச்சியில் திமுகவினர்….!!!!!

கரூர் நகரில் முக்கிய பகுதியாக விளங்கும் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் ஏற்கனவே திமுகவினர் சுவர் விளம்பரம் செய்திருந்த நிலையில் தற்போது திமுகவினர் சுவர் விளம்பரம் செய்யாத ஒரு இடத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயமுத்தூர், சென்னையில் இருப்பது போக
எப்போதாவது கரூர் வந்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள கரூர் பயணிகள் மாளிகையில் தங்கி அரசு மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உள்ள கரூர் பயணிகள் தங்கி கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பார்க்கும்போது சுவர் விளம்பரத்தினை அமைச்சர் கவனிப்பார்.

அதனால் மாநில அரசு உட்பட கோட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவரில் திமுகவினர் மட்டுமே விளம்பரம் செய்வோம் என பாஜகவிடம் கூறியிருக்கின்றனர். இதனால் வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட பிரச்சினையில் கரூர் மாவட்ட பாஜக மற்றும் தி மு க விற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கரூர் மைதானம் முன்பு தனியார் சுற்றுச்சூழலில் பாஜக சார்பில் செய்யப்பட்டிருந்த விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் போன்றோரது புகைப்படங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மை பூசி இருக்கின்றனர்.

ஏற்கனவே பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன் கரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனைகள் மது விற்பனை பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அத்தோடு அம்பேத்கர் 132 வது ஜெயந்தி விழாவின்போது கருர் தின்னப்ப கார்னரில் கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூரப் பாண்டியன் பட்டியல் அணி நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி  டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வி.வி.செந்தில்நாதன் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் மீது விளக்கம் கேட்டு கரூர் மாவட்ட காவல்துறைக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இதனால், காவல்துறையின் தூண்டுதலின் பேரிலேயே,திமுகவினரின் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததோடு, சுவர் விளம்பரங்கள் மீது கருப்பு மை பூசியுள்ளதாக பாஜகவினர் குறை கூறியுள்ளனர். இந்த பிரச்சனையால் கரூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Categories

Tech |