தமிழக முதல்வர் குறித்த அவதூறு பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் மற்றும் நபிகள் நாயகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக குமரி மாவட்ட கோட்டார் துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அருள் முருக கிருஷ்ணன் என்பவர் அவதூறு கருத்துகள் பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் திருவாரூர் சென்று அருள் முருக கிருஷ்ணனை கைது செய்தனர்.