Categories
மாநில செய்திகள்

பார் கவுன்சில் உத்தரவை ரத்து…. வழக்கறிஞர்களுக்கு தொடரும் சிக்கல்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

தர்மபுரி மாவட்டத்தில்   அதியமான் கோட்டை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வரதம்மாள் என்பவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை தனது மகன் ஜெகநாதன் நிர்வகிக்க  அதிகாரம் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நாகராஜ் என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2004ல் கடன் வாங்கியிருக்கிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் ஜெகநாதன் விசாரித்ததில் இடத்தை அபகரித்தது நாகராஜ், நாகேந்திரன் மட்டுமல்லாமல் ராஜாராம் ரவி, முத்துசாமி என்ற மூன்று வழக்கறிஞர்கள் இந்த மோசடிக்கு உதவி இருக்கின்றனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் புகாரை விசாரித்த பார் கவுன்சிலிங் மூன்று வழக்கறிஞர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 2019 செப்டம்பர் 3-ஆம் தேதி அவர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும் பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மீது நம்பிக்கை இல்லை எனவும் அதனால் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் தலைமையில் குழு அமைத்து வழக்கறிஞர்கள் மீதான விசாரணை நடத்த வேண்டும் என கோரி ஜெகநாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபரில் ஜெகநாதன் காலமானதால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சார்பில் பார் கவுன்சில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஜெகநாதன் சட்டபூர்வ வாரிசுகளான எங்கள் மனுவை ஏற்று வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த கோரிக்கையை நிராகரித்த பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை முடித்துவைத்துள்ளது. இதனை  எதிர்த்து ஜெகநாதனின் மனைவி மற்றும் குழந்தைகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார் கொடுத்தவர் மரணமடைந்து விட்டதால் அந்த புகாரை ரத்து செய்துவிட முடியாது என வழக்கறிஞர் இளையபெருமாள் வாதிட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீதான புகார்தாரர் இறந்துவிட்டார் என்று காரணத்திற்காக முடித்துவிட முடியாது. மேலும் புகார்தாரரின் வாரிசுகள் புகாருக்கு பதிலாக வழக்கை தொடர்ந்து நடத்த முடியும் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் இதனை உறுதி செய்துள்ளது. அந்தநாள் வழக்கறிஞர்கள் ரவி, முத்துசாமி போன்றோர்  மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடித்து வைத்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பார் கவுன்சில் புதிய ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த விசாரணை நடவடிக்கை குழு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |