தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம்காட்டி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த பின் மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதையடுத்து பாட வாரியாக தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. அவற்றில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும். அதன்பின் 11ஆம் வகுப்புக்கு மே 9 முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
அதனைதொடர்ந்து 10ஆம் வகுப்புக்கு மே 6- 30ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். இந்நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜனவரிமாதம் ஒமிக்ரான் பரவல் தடுப்பு பணியாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியான சூழ்நிலையில் , தேர்வுக்கு குறைந்த காலமே இருப்பதால் மாணவர்களால் பாடங்களை உள்வாங்கி படிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் தேர்வுக்கான பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கபடவில்லை. இதன் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தேர்வுவிற்கான பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்