தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் மும்பையில் உள்ள மட்டுங்கா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மும்பையில் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் இரவு 9.45 மணியளவில் ரயில் திடீரென தடம் புரண்டது. சாளுக்யா எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி கடக் எக்ஸ்பிரஸ் இடையே மட்டுங்கா இரயில் நிலையம் அருகே சிறிய அளவில் மோதியதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பயணிகளின் அவசரகால உதவிக்காக 1512 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.