பிரபல நடிகை கத்ரினா கைஃபின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைஃப். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் “ஹாப்பி கிறிஸ்துமஸ்”, சல்மான் கானுடன் “டைகர்” ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து டைகர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் விக்கி கெளசலுக்கும், கத்ரினாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணம் ஆவதற்கு முன்பு இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலகும். அதேபோல் சமீபத்தில் மாலதி சென்ற போது கத்ரினா கைஃப் கடற்கரையில் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இப்படி கவர்ச்சியான போட்டோகளை தாராளமாக வெளியிட்டு வருகிறார் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் கத்ரினா எளிமையாக பிங்க் கலரில் லூசான சுடிதார் ஒன்றை அணிந்து வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் கத்தரினாவா இது இப்படி ஆளே முழுசா மாறி முழுவதுமாக கவர் செய்த உடையில் வந்திருக்கிறாரா என ஆச்சரியமாக கேட்க துவங்கி விட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையதளஙளில் பார்த்த ரசிகர்கள் கத்ரினா குடும்பப் பெண்ணாக மாறி விட்டார்கள் போல, ஒரு வேளை கற்பமாக இருப்பார்களோ, விரைவில் அம்மாவாக போகிறாரா, அவரின் குழந்தையை பார்க்க ஆவலாக உள்ளதாக பலரும் கமெண்ட் செய்யத் தொடங்கி விட்டனர். இருபினும் தனது கர்ப்பம் பற்றி இதுவரை கத்ரினா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.