ஹார்டுவேர்ஸ் கடையில் பணம் பொருளை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், நியூ ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் மோகன்(48). இவர் விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்திருக்கிறார். கடந்த 13 ஆம் தேதி அன்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறந்து பார்த்தபோது மேலே உள்ள ஹாஸ்பெட்டாஸ் உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது 20 ஆயிரம் ரூபாய் பணம், கேபிள் வயர், எலக்ட்ரானிக் பொருள் என 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் கடைக்கு சென்று விசாரணை நடத்தியபோது அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவான தகவல்களை ஆய்வு செய்து பார்த்தபோது ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.