இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நடத்தினர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
அதே சமயம் பதிலடியாக ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 90 பயங்கரவாதிகள் பலத்த காயமடைந்தனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.