ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசிற்கு எதிராக செயல்படுவதாக ஆளுநர்ஆர்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது. அதன்படி அந்த அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்துள்ளனர்.