சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கவரைப்பேட்டை சத்தியவேடு சாலையில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த சரவணகுமார் மற்றும் விஷ்வா என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணகுமார் மற்றும் விஷ்வா ஆகிய இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.