Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடிக்கும் சத்தம்” பிறந்த குழந்தையுடன் விழுந்த தாய்…. சென்னையில் பரபரப்பு…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி திருவள்ளுவர் தெருவில் நகைக்கடை ஊழியரான நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மனைவி உள்ளார். கடந்த மார்ச் மாதம் யமுனாவுக்கு எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட யமுனா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் யமுனா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று யமுனா தனது கணவரோடு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் பிறந்து 25 நாட்களே ஆன தனது குழந்தையை தூக்கிக்கொண்டு யமுனா 2-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யமுனா குழந்தையுடன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் குழந்தை அருகில் இருக்கும் மற்றொரு வீட்டின் மாடியில் விழுந்தது. மேலும் கீழே விழுந்ததால் யமுனாவின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து மனைவியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற நிஷாந்த் மயங்கி கிடந்த குழந்தை மற்றும் யமுனா ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து யமுனா மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |