மலையேறிய பக்தர் மூச்சு திணறலால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜசேகர் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் பூண்டி அடிவாரத்திலிருந்து வெள்ளிங்கிரி மலை ஏறியுள்ளனர்.
இவர்கள் 2-வது மலையில் ஏறிக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கரிகாலன் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரிகாலனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.