Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. களைகட்டியது நீலகிரி…!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இதனால் மற்ற இடங்களைவிட ஊட்டியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் விடுதிகளில் தங்கி இருந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண மலர்களைப் பார்த்து ரசிக்கின்றனர். இந்த மலர்களுக்கு அருகில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதனையடுத்து ரோஜா பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஊட்டி படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ‌மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கோடை சீசனில் ஊட்டி களையிழந்து காணப்பட்டது. ‌ இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் கோடை சீசன் களைகட்டியுள்ளது.

Categories

Tech |