Categories
தேசிய செய்திகள்

“இ-சஞ்சீவனி தொலைபேசி ஆலோசனை வசதி”…. எத்தனை மையங்களில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இ-சஞ்சீவனி தொலைபேசி ஆலோசனை வசதியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார். அழகிய இந்தியா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நலவாழ்வு மையங்கள் இன்று 4வது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறது. அதன் ஒர பகுதியாக ஆரோக்கிய இந்தியா நலவாழ்வு மையங்கள் வாயிலாக பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் கடந்த மாத இறுதிவரையிலும் 1,17,440 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையங்களில் வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியான “இ-சஞ்சீவனி” முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் 1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இன்று முதல் இ-சஞ்சீவனி முறை நடைமுறைபடுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இது குறித்து மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது, “இதன் வாயிலாக சாதாரண குடிமக்களும் நாட்டின் மிகப் பெரிய மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற முடியும். இதனிடையில் ஆயுஷ்மான் பாரத்திட்டம் மீதான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை இந்த மையங்கள் நிஜமாக்கி வருகிறது. வரும் காலங்களில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் சுகாதாரத் துறையில் பெரிய புரட்சியைக் கொண்டு வரும். அத்துடன் ஏப்ரல் 18 முதல் 23 வரை நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்திலும, சுகாதார முகாம் ஏற்பாடு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |