பாகிஸ்தானின் புதிய அதிபரான ஷெபாஸ்ஸின் அரசு இம்ரான்கானின் ஆட்சியில் வழங்கப்பட்ட பெட்ரோல், டீசலுக்கான மானியத்தை நிறுத்தினால் அவற்றுக்கான விலை மேலும் அதிகரிக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்குப் போட்டுள்ளது.
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஷெபாஷ் சமீபத்தில் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் எண்ணை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய கணக்கு ஒன்றை போட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த இம்ரான்கானின் ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கியுள்ளது.
இந்த மானியத்தை ஷெபாஸின் அரசு நிறுத்தினால் பெட்ரோல் விலையை ரூபாய் 22 உயர்த்தி லிட்டருக்கு 171 க்கு விற்க வேண்டிய சூழல் வரும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 51 உயர்த்தி 195 க்கு விற்க வேண்டிய நிலைமை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.