ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அடுத்த உப்பங்களா என்ற கிராமத்தில் நடந்த கண்காட்சியில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. தல்ரேவு தொகுதியில் உள்ள உப்பங்களா கிராமத்திலுள்ள பொலேரு அம்மா மேளாவில் நிர்வாண நடனம் ஆட தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடப்பதாகவும் கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.