Categories
தேசிய செய்திகள்

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை….. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அனுமன் ஜெயந்தி முன்னிட்டு குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமன் சிலையை இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையடுத்து நாட்டின் நான்கு திசையிலும் சிலை அமைக்கும் முயற்சியில் இரண்டாவது சிலை இன்று அமைக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் இது போன்ற பிரமாண்ட சிலையை நாங்கள் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இரண்டாவது சிலை இன்று மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்கத்தில் மேலும் இரண்டு சிலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நான்கு திசைகளிலும் கட்டப்படும் அனுமன் சிலைகளில் இரண்டு சிலை தற்போது அமைக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் முதல் சிலை வடக்கில் 2010ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் அமைக்கப்பட்டது. மூன்றாவது சிலை தெற்கே தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் அமைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |