உயர் அதிகாரிகளின் தொடர் அழுத்தத்தால் மன வேதனைக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக 7 மாதங்களாக பணியாற்றி வருகின்றார் நீலாவதி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் சென்ற 13-ஆம் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தபோது காதல்ஜோடி தஞ்சம் அடைந்தார்கள். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற சில நிமிடங்களிலேயே பெண்ணின் உறவினர்கள் பெண்ணை கடத்திச் சென்றார்கள். இச்சம்பவத்தின் பேரில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை மீட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது அந்த பெண் என்னை பெற்றோர்கள் கடத்தவில்லை என்றும் தனது விருப்பத்தின் பேரில் தான் சென்றேன் எனவும் நான் பெற்றோருடன் இருக்க விரும்புகின்றேன் எனவும் கூறினார். இதனால் அந்தப் பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் உயரதிகாரி நீலாவதியை வாக்கிடாக்கியில் கடுமையாக எச்சரித்ததால் மனவேதனை அடைந்த நீலாவதி அவரின் செல்போனிலிருந்து உயரதிகாரிகளுக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது குழந்தைகளை பாதுகாக்குமாறும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தோழியின் வீட்டிற்கு சென்ற பொழுது அங்கு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
சிகிச்சை பெற்று வந்த நீலாவதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது, போலீஸ் உயரதிகாரி வாக்கிடாக்கியில் கடுமையாக திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை எனவும் இந்த முடிவிற்கு காரணம் போலீஸ் உயரதிகாரி மற்றும் போலீஸ் எட்டும் தான் என கூறியுள்ளார். பெண் போலீஸ் ஒருவர் சமுதாய ரீதியாக அரசியல் செய்வதாகவும் ஏட்டுவை ஒருமுறை நான் திட்டியதை தொடர்ந்து என்னை பழி வாங்குவதற்காக உயர் அதிகாரிகளிடம் பொய்யான தகவலை சொல்லி வருகின்றார். இவர்களின் செயலால் என்னை ஆயுதப்படைக்கு போகச் சொன்னார்கள். ஜீப்பையும் பிடுங்கி வைத்ததார்கள். இது போன்ற செயலில் உயர் அதிகாரி ஈடுபட்டால் தொடர்ந்து ஈடுபட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக நான் தற்கொலைக்கு முயன்றேன் என கூறியுள்ளார்.