Categories
உலக செய்திகள்

”வேகமாக பரவும் வைரஸ்” சீனாவின் பல நகருக்கு சீல்…. முன்னெச்சரிக்கை தீவிரம் …!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தை தொடர்ந்து ஹியாங்ஹாங் மற்றும் இசோவ் நகரங்களுக்கும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வுஹான் நகரத்தில் மட்டும் நேற்று வரை கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் 600 பேருக்கு  இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வுஹான் நகரில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேபோல் பக்கத்துக்கு நகரமான ஹியாங்காங்க்லிலும்  நேற்று நள்ளிரவு முதல் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும்  நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு 75 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்க பட்டுள்ளது.

இதைப்போல  11 லட்சம் மக்கள் வசிக்கும் இசோவ் நகரிலும் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |