Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பஞ்சு, நூல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஈரோட்டில் போராட்டம்”… 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 4000 ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் தொடர்ந்து நூல் விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், அவர்களைச் சார்ந்த கடைகளும் நேற்று அடைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியுள்ளதாவது, 356 கிலோ பஞ்சு ஒரு கண்டி எனப்படும். சென்ற இரண்டு வருடங்களில் 356 கிலோ 10 ரூபாய் 43 ஆயிரத்திலிருந்து தற்போது ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய அரசு அதை ஏற்று இறக்குமதி வரியை ரத்து செய்தது. காட்டன் நூலை அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டுவந்து நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நூல் விலையை மாதமொருமுறை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்பட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் நேற்று மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் ரூபாய் 50 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |