திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் 150% சொத்து வரியை உயர்த்தி மக்களை கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு போராடும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஒரு தீய சக்தி,பொய்யான வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்து விட்டு தற்போது தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. விரைவில் திமுக ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.