அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட சில மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி கோமதி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விழாவை நடத்திய சின்னையா, தாமரைச்செல்வன், சேதுராமன, அழகுசாமி உள்ளிட்ட 5பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.