இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பழைய வண்ணார்பேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பிறகு திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புதிய அப்டேட் குறித்து மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது. அடுத்த படத்தின் தலைப்பு பகாசூரன். இந்த படத்தின் படப்பிடிப்பு திங்கள் முதல் ஆரம்பமாகும் என குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது.. அடுத்த திரைப்படத்தின் தலைப்பு #பகாசூரன் #Bakasuran.. திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.. 🙏❤️ @selvaraghavan @natty_nataraj @SamCSmusic @ProBhuvan @Gmfilmcorporat1 @JSKGopi pic.twitter.com/FdFhg4Kq7r
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 16, 2022